பஞ்சாயத்து தலைவர்கள் கூட்டமைப்பு கூட்டம்


பஞ்சாயத்து தலைவர்கள் கூட்டமைப்பு கூட்டம்
x
தினத்தந்தி 9 Jan 2023 12:15 AM IST (Updated: 9 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

குற்றாலத்தில் பஞ்சாயத்து தலைவர்கள் கூட்டமைப்பு கூட்டம் நடந்தது.

தென்காசி

கடையம்:

குற்றாலம் பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் கலையரங்கத்தில் கடையம் யூனியன் அனைத்து பஞ்சாயத்து தலைவர்களின் கூட்டமைப்பின் 17-வது கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கூட்டமைப்பு தலைவர் டி.கே.பாண்டியன் தலைமை தாங்கினார். செயலாளர் பூமிநாத், கவுரவ தலைவர்கள் அழகு துரை, பாப்பான்குளம் பஞ்சாயத்து தலைவர் முருகன், பொட்டல்புதூர் பஞ்சாயத்து தலைவர் கணேசன், சேர்வைக்காரன்பட்டி பஞ்சாயத்து தலைவர் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொருளாளர் முகமது உசேன் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக தட்சணமாற நாடார் சங்க செயற்குழு உறுப்பினர் செல்வம் கலந்துகொண்டு பேசினார். நிகழ்ச்சியில் பஞ்சாயத்து தலைவர்கள், கீழாம்பூர் மாரி சுப்பு, மேலாம்பூர் குயிலி லட்சுமணன், தெற்கு கடையம் முத்துலட்சுமி ராமதுரை, மடத்தூர் முத்தமிழ் செல்வி ரஞ்சித், திருமலையப்பபுரம் மாரியப்பன், துப்பாக்குடி செண்பகவல்லி ஜெகநாதன் மற்றும் ஊராட்சி செயலாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கடையத்தை தனி தாலுகா ஆக்க வேண்டும். பொங்கல் பொருட்களை ஊராட்சி மன்ற தலைவர்கள் தலைமையில் வழங்க வேண்டும் உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தின் ஏற்பாடுகளை தெற்கு மடத்தூர் பிரேம ராதா ஜெயம் செய்திருந்தார். ஊராட்சி செயலர் ஜெயம் நன்றி கூறினார்.


Next Story