முறைகேடாக மின்சாரம் பயன்படுத்திய ஊராட்சி மன்ற தலைவருக்கு அபராதம்
முறைகேடாக மின்சாரம் பயன்படுத்திய ஊராட்சி மன்ற தலைவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
ஆற்காடு
ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி அடுத்த மோசூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மகேந்திரன். ஊராட்சி மன்ற தலைவரான இவர் தனது நிலத்தில் உள்ள ஆழ்துளை கிணற்றில் பொருத்தப்பட்டுள்ள மோட்டாருக்கு மின்சார இணைப்புக்கு அதிகாரிகளிடம் அனுமதி பெற்றுள்ளார். ஆனால் அனுமதி பெற்ற இடத்தை விட்டு விட்டு வேறு ஒரு இடத்தில் மோட்டார் அமைத்து மின்சாரத்தை முறைகேடாக பயன்படுத்தி தண்ணீர் எடுப்பதாக வேலூர் மின்சார வாரிய அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் மின்வாரிய பறக்கும் படை அதிகாரி கிருஷ்ணன் தலைமையிலான குழுவினர் நேற்று மோசூர் கிராமத்தில் ஆய்வு செய்தனர். அப்போது மகேந்திரன் மின்மோட்டார் அமைத்து அதற்கு முறைகேடாக மின்சாரத்தை பயன்படுத்தி வந்தது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து ஊராட்சி மன்ற தலைவர் மகேந்திரனுக்கு திமிரி மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் சாந்தி பூஷன் ரூ.18 ஆயிரத்து 633 அபராதமாக விதித்தார்.