ஊராட்சிமன்ற தலைவரின் கார் கண்ணாடியை உடைத்து ரூ.1 லட்சம் திருட்டு - போலீசார் விசாரணை...!


ஊராட்சிமன்ற தலைவரின் கார் கண்ணாடியை உடைத்து ரூ.1 லட்சம் திருட்டு - போலீசார் விசாரணை...!
x

கடலூர் அருகே ஊராட்சிமன்ற தலைவரின் கார் கண்ணாடியை உடைத்து ரூ.1 லட்சம் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடலூர்


கடலூர் மாவட்டம், வேப்பூர் அடுத்துள்ள அரியநாச்சி கிராமத்தை சேர்ந்த கணபதி மகன் கருணாநிதி (வயது43). அவர் கழுதூர் ஊராட்சி மன்ற தலைவராக உள்ளார்.

இந்நிலையில் கடந்த 2-ந் தேதி மதியம் அரியநாச்சியிலிருந்து வேப்பூர் கூட்டுரோடு அருகிலுள்ள வங்கியில் பணம் செலுத்த தனது காரில் ரூ.1.57 லட்சம் பணத்தோடு சென்றுள்ளார்.

வங்கியில் பணம் செலுத்த முடியாத சூழலில் அங்கிருந்து தனது காரில் கழுதூர் கிராமத்தில் சென்னை திருச்சி சர்விஸ் சாலையில் உள்ள ஸ்டேட் பேங்கில் பணம் செலுத்த சென்றுள்ளார்.

அப்போது கழுதூர் ஸ்டேட் பேங்க் முன் காரை நிறுத்திவிட்டு வங்கிக்குள் சென்று கருணாநிதி வெளியே வந்து பார்த்த போது காரின் கண்ணாடி உடைக்கப்பட்டு காருக்குள் இருந்த ரூ.1.57 லட்சம் பணம் கொள்ளை போனது தெரியவந்தது.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வேப்பூர் போலீசார் காரின் கண்ணாடியை உடைத்து டேஸ் போர்டில் இருந்த பணத்தை திருடி சென்ற மர்ம நபர் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story