ரூ.24 லட்சத்தில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம்
ரூ.24 லட்சத்தில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம்
தஞ்சாவூர்
தஞ்சை மாவட்டம் மானாங்கோரை ஊராட்சியில் ரூ.24 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கினார். அரசு தலைமை கொறடா கோவி.செழியன், துரை. சந்திரசேகரன் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு புதிதாக கட்டப்பட்டுள்ள ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தினை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் மணிரத்தினம், வடக்கு ஒன்றிய செயலாளர் முரசு, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உஷா புண்ணியமூர்த்தி, ஒன்றிய தலைவர் வைஜெயந்தி மாலா உள்பட அரசு அதிகாரிகள், அலுவலர்கள் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி செயலாளர் சரண்ராஜ் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story