ரூ.29 லட்சத்தில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம்


ரூ.29 லட்சத்தில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம்
x

சின்னாரம்பட்டியில் ரூ.29 லட்சத்தில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் கட்ட பூமிபூஜை செய்யப்பட்டது.

திருப்பத்தூர்

கந்திலி ஒன்றியம், சின்னாரம்பட்டி ஊராட்சியில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.29 லட்சம் செலவில் சின்னாரம்பட்டி ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம், 15-வது ஒன்றிய நிதி குழுவில் இருந்து ரூ.2 லட்சம் மதிப்பீட்டில் சின்னாரம்பட்டி கிராமத்தில் பேவர்பிளாக் சாலை பணிகளுக்கு பூமிபூஜை போடும் நிகழ்ச்சி சின்னாரம்பட்டி கிராமத்தில் நடைபெற்றது. கந்திலி வட்டார வளர்ச்சி அலுவலர் துரை தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் பிரபாவதி முன்னிலை வகித்தார். ஊராட்சி மன்ற தலைவர் ஆசிரியர் எம்.சண்முகம் வரவேற்றார். கந்திலி ஒன்றியக் குழு தலைவர் திருமதி திருமுருகன், மாவட்ட கவுன்சிலர் கே.ஏ.குணசேகரன் ஆகியோர் பூமிபூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்து பேசினார்கள். நிகழ்ச்சியில் கந்தலி மேற்கு ஒன்றிய செயலாளர்கள் கே.முருகேசன், கே.எஸ்.ஏ.மோகன்ராஜ், ஒன்றிய கவுன்சிலர் சர்க்கரை, ஆர்வில், ஊராட்சி மன்றம் அலுவலகம் கட்ட நிலம் வழங்கிய நடராசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story