ஊராட்சி தலைவரை கண்டித்து உறுப்பினர்கள் மறியல்


ஊராட்சி தலைவரை கண்டித்து உறுப்பினர்கள் மறியல்
x

ஊராட்சி துணை தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்போவதாக ஊராட்சி தலைவர் கூறியதை கண்டித்து மறியல் நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 

ராணிப்பேட்டை

ஊராட்சி மன்றம்

ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம் ஊராட்சி மன்ற தலைவராக ஆர்.சி.அர்ஜூனன், துணை தலைவராக சரன்யா விஜயன் மற்றும் 8 வார்டு உறுப்பினர்கள் உள்ளனர். இந்த நிலையில் பாணாவரம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் சாதாரண கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் 10 தீர்மானங்கள் வாசிக்கப்பட்டு அதில் 5 உறுப்பினர்கள் மட்டும் கையெழுத்திட்ட நிைலயில் கூட்டம் முடிந்துவிட்டது என கூறி தலைவர் சென்று விட்டார்.

அந்த 10 தீர்மானங்களில் துணை தலைவர் சரண்யா விஜயன் வானளாவிய அதிகாரம் இருப்பதாகவும் ஊராட்சி நிர்வாகத்திற்கு ஊறு விளைவிக்கும் வகையில் தொடர்ந்து செயல்பட்டு வருதாகவும் அவர் சட்டரீதியாக செயல்படுவார் என்ற நம்பிக்கை இல்லை என்பதால் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவது என ஒரு தீர்மானத்தில் கூறப்பட்டிருந்தது.

இதனை கண்டித்து துணை தலைவர் சரண்யா விஜயன் மற்றும் வார்டு உறுப்பினர்கள் ஆகியோர் காவேரிப்பாக்கம் பாணாவரம் நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த பாணாவரம் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார், சப்-இன்ஸ்பெக்டர் பார்த்தீபன் மற்றும் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பரபரப்பு குற்றச்சாட்டு

இது குறித்து துணை தலைவர் சரண்யா கூறியதாவது:-

பாணாவரம் ஊராட்சி மன்ற தலைவரான ஆர்.சி.அர்ஜுனன் துணைத் தலைவரான என்னிடம் முறைகேடாக கையெழுத்து வாங்கினார். துணைத் தலைவரின் வேலை காசோலையில் இணைந்து கையெழுத்து போடுவது தானே தவிர செலவு கணக்கெல்லாம் கேட்க முடியாது என்று கூறினார். மேலும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டதில் புதிதாக அட்டை பெற பொதுமக்கள் பலர் விண்ணப்பித்துள்ளனர். ஆனால் புதிய அட்டை வேண்டி விண்ணப்பித்தவர்களுக்கு அட்டை வழங்காமல் ஊராட்சி மன்றத் தலைவர் அவரது குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் புதிதாக அட்டை வழங்கியுள்ளார்.

ஊராட்சி மன்றத் துணைத் தலைவராகிய நான் ஒரு பெண் என்பதால் என்னை தலைவர் அவமதிப்பாக பேசுகிறார். இது குறித்து நான் கலெக்டர் அலுவலகத்திலும், மாவட்ட திட்ட இயக்குனர் அலுவலகத்திலும் மனு கொடுத்திருந்தேன். இது சம்பந்தமாக ஊராட்சி உதவி இயக்குனர் (தணிக்கை) மற்றும் உதவி இயக்குனர் ஆகியோர் விசாரணை நடத்தினர்.

செல்லாது

மேலும் புகார் சம்பந்தமான மனு மீது விசாரணை முடியாமலே உடனடியாக சாதாரண கூட்டம் நடத்தி நம்பிகை இல்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளார். இந்த தீர்மானம் செல்லாது என துணை தலைவர் சர்ண்யா தெரிவித்தார்

பின்னர் வட்டார வளர்ச்சி அலுவலர் தண்டாயுதபாணி துணை தலைவர் சரண்யாவிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய விசாரணை நடத்தப்படும் என தெரிவித்தார். இந்த சம்பவத்தால் அஇங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story