போலீஸ்காரரை தாக்கிய பஞ்சாயத்து தலைவியின் கணவர் கைது


போலீஸ்காரரை தாக்கிய பஞ்சாயத்து தலைவியின் கணவர் கைது
x

காரியாண்டி அருகே போலீஸ்காரரை தாக்கிய பஞ்சாயத்து தலைவியின் கணவரை போலீசார் கைது செய்தனர்.

திருநெல்வேலி

இட்டமொழி:

வடக்கு விஜயநாராயணம் அருகே உள்ள காரியாண்டியை அடுத்த வெங்கட்ராயபுரம் ஜே.ஜே.காலனியை சேர்ந்தவர் பேச்சிமுத்து மகன் சுடலை (வயது 38). இவருடைய மனைவி பேச்சியம்மாள். சடையனேரி வெங்கட்ராயபுரம் பஞ்சாயத்து தலைவராக உள்ளார். சுடலையின் அண்ணன் மனைவி சங்கிலி. சுடலை மீது மணல் கடத்தல் சம்பந்தமாக வடக்கு விஜயநாராயணம் போலீசில் வழக்குகள் உள்ளது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு வழக்கு விசாரணைக்காக சில போலீசார் சுடலை வீட்டுக்கு சென்றுள்ளனர். அப்போது சுடலையும், அவரது மனைவி மற்றும் அண்ணன் மனைவி ஆகியோர் போலீசாரை அவதூறாக பேசி தாக்கியதாக கூறப்படுகிறது. சுடலை ஒரு போலீசாரின் காதை கடித்ததால் காயம் அடைந்த அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதுசம்பந்தமாக வடக்கு விஜயநாராயணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாககுமாரி வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் தேடி வந்தார். இந்நிலையில் சுடலை நேற்று வடக்கு விஜயநாராயணம் போலீசில் சரணடைந்தார். போலீசார் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவர் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார்.


Next Story