ஊராட்சி செயலர்கள் சங்க கொடியேற்று விழா
நிலக்கோட்டையில், ஊராட்சி செயலர்கள் சங்க கொடியேற்று விழா நடந்தது.
தமிழ்நாடு ஊராட்சி செயலர்கள் சங்கம் சார்பில், ஊராட்சி செயலர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கிய நாளான நவம்பர் 30-ந்தேதியை ஆண்டுதோறும் ஊராட்சி செயலர்களின் எழுச்சி நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி ஊராட்சி செயலர்களின் எழுச்சி தினவிழா நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நேற்று நடந்தது. விழாவுக்கு மாவட்ட தலைவர் பாண்டியராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர்கள் பொன்னுச்சாமி, ராமநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநில இணை செயலாளர் விஜயகர்ணபாண்டியன் வரவேற்றார். மாநில தலைவர் ஜான்போஸ்கோ பிரகாஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சங்க கொடியை ஏற்றி வைத்து இனிப்பு வழங்கி பேசினார். விழாவில் நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய தலைவர் கணேசன், ஒன்றிய செயலாளர் பி.ஜெய்கணேஷ், ஒன்றிய பொருளாளர் முகமது அத்திப், தமிழ்நாடு மேல்நிலை நீர்த்தேக்கதொட்டி ஆபரேட்டர்கள் சங்க தலைவர் செந்தில்குமார், ஊராட்சி செயலர்கள், சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.