ஊராட்சி செயலாளர்கள் சங்க கூட்டம்


ஊராட்சி செயலாளர்கள் சங்க கூட்டம்
x
தினத்தந்தி 22 May 2023 12:15 AM IST (Updated: 22 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

நீடாமங்கலத்தில் ஊராட்சி செயலாளர்கள் சங்க கூட்டம்

திருவாரூர்

நீடாமங்கலம்:

நீடாமங்கலத்தில் கிராம ஊராட்சி செயலாளர்கள் சங்க கூட்டம் ஒன்றிய தலைவர் ரவிச்சந்திரன் தலைமையில் நடந்தது. ஒன்றிய செயலாளர் நரசிம்மன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மாநில அமைப்பு செயலாளர் குருசெல்வமணி, மாவட்ட செயலாளர் கருப்பையன், மாநில செயற்குழு உறுப்பினர் சந்திரசேகர் மற்றும் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். ஊராட்சி செயலாளர்களுக்கு கருவூலம் மூலம் ஊதியம் வழங்க அரசை கேட்டுக்கொள்வது. திருவாரூரில் நடைபெறும் பேரவையில் நீடாமங்கலம் ஒன்றியத்தில் இருந்து திரளானோர் கலந்து கொள்வது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. முடிவில் ஒன்றிய பொருளாளர் மகேந்திரன் நன்றி கூறினார்.


Next Story