ஊராட்சி செயலாளர்கள் 3 நாட்கள் தொடர் விடுமுறை கேட்டு மனு
ஊராட்சி செயலாளர்கள் 3 நாட்கள் தொடர் விடுமுறை கேட்டு ஆணையரிடம் மனு அளித்தனர்
மயிலாடுதுறை
ஊரக வளர்ச்சித் துறையில் பணிபுரியும் ஊராட்சி செயலாளர்கள் வரி வசூல், மின்விளக்கு பராமரித்தல், 100 நாள் வேலைத்திட்டம், முழு சுகாதாரம் உள்பட 20-க்கும் மேற்பட்ட பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் ஊராட்சி செயலாளர்களுக்கு கூடுதல் பணி சுமை ஏற்படுவதாகவும், அதிக மன உளைச்சல் ஏற்படுவதாகவும், பல ஊராட்சி தலைவர்கள் ஊதியம் அனுமதிப்பதில் பாரபட்சம் காட்டுவதாகவும், ஊராட்சி செயலாளர்களுக்கு கருவூலம் மூலம் மாத ஊதியம் பெறுவதை உறுதி செய்ய வேண்டும். ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் வருகிற 12-ந் தேதி முதல் 14-ந் தேதி வரை 3 நாட்கள் தொடர் விடுமுறை கேட்டு சீர்காழி ஊராட்சி ஒன்றிய ஆணையர் இளங்கோவனிடம், ஊராட்சி செயலாளர்கள் மனுக்களை கொடுத்தனர்.
Related Tags :
Next Story