ஊராட்சி செயலாளர் தூக்குப்போட்டு தற்கொலை


ஊராட்சி செயலாளர் தூக்குப்போட்டு தற்கொலை
x

கீழ்வேளூர் அருகே ஊராட்சி செயலாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாகப்பட்டினம்

சிக்கல்:

கீழ்வேளூர் அருகே ஊராட்சி செயலாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஊராட்சி செயலாளர் தற்கொலை

நாகை மாவட்டம், கீழ்வேளூர் அருகே உள்ள மேலநாகலூர் காலனி தெருவை சேர்ந்தவர் மாசிலாமணி (வயது 44). இவர் கூரத்தாங்குடி ஊராட்சியில் செயலாளராக பணிபுரிந்து வந்தார்.அவரை 6 மாதங்களுக்கு முன்பு கீழ்வேளூர் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்து வந்த அவர், சம்பவத்தன்று மனைவி ராஜேஸ்வரி வெளியே சென்று இருந்த நேரத்தில் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

போலீசார் விசாரணை

இதுகுறித்து தகவல் அறிந்த வலிவலம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மாசிலாமணி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.இதுகுறித்த புகாரின்பேரில் வலிவலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story