ஊராட்சி செயலாளர் தற்காலிக பணி நீக்கம்


ஊராட்சி செயலாளர் தற்காலிக பணி நீக்கம்
x

வடகுச்சிபாளையத்தில் சுதந்திர தின விழா ஏற்பாடுகளை மேற்கொள்ளாத ஊராட்சி செயலாளரை தற்காலிகமாக பணி நீக்கம் செய்து கலெக்டர் மோகன் உத்தரவிட்டுள்ளார்.

விழுப்புரம்

விக்கிரவாண்டி,

நாட்டின் 75-வது சுதந்திர தின விழா ஏற்பாடுகள் குறித்து .விக்கிரவாண்டி ஒன்றியம் வடகுச்சிபாளையம் ஊராட்சியில் கலெக்டர் மோகன் திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு தேசிய கொடி ஏற்றுவதற்கான கம்பம் தயார் செய்யாமலும், முக்கிய பிரமுகர்களுக்கு அழைப்பு அனுப்பாமல் இருந்ததை அறிந்து கலெக்டர் மோகன் அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து பணியில் அலட்சியமாக ஈடுபட்டதாக கூறி ஊராட்சி செயலாளர் முருகனை தற்காலிக பணி நீக்கம் செய்து கலெக்டர் மோகன் உத்தரவிட்டார். இந்த ஆய்வின்போது போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா, திட்ட இயக்குனர் சங்கர், பி.ஆர்.ஓ., பாண்டி, ஊராட்சி மன்ற தலைவர் கலியபெருமாள், துணைத்தலைவர் மலர்விழி பாலு உள்பட பலர் உடன் இருந்தனர்.

மயிலம்

முன்னதாக மயிலம் ஒன்றியம் அவ்வையார்குப்பம், வெங்கந்தூர், பெரமண்டூர், ஆகிய ஊராட்சிகளில் கலெக்டர் மோகன் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், விழுப்புரம் மாவட்டத்தை பொறுத்தவரை அனைத்து பஞ்சாயத்துக்களிலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் மட்டுமே தேசியக்கொடியை ஏற்றுவதை உறுதி செய்வோம்.

இதில் ஏதேனும் சுனக்கம் அல்லது குறைகள் இருப்பின் அது குறித்த புகாரை கட்டுப்பாட்டு அறையில் உள்ள 7402606326 மற்றும் 7402606325 என்கிற செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.

நடவடிக்கை

அவ்வாறு புகார் அளித்தால், குறைகளை நீக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார். இந்த ஆய்வின்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முதன்மை திட்ட இயக்குனர் சங்கர்,மயிலம் ஒன்றியக்குழு தலைவர் யோகேஸ்வரி மணிமாறன், திண்டிவனம் தாசில்தார் வசந்தம் கிருஷ்ணன் மற்றும் அவ்வையார் குப்பம் ஊராட்சி மன்ற தலைவர் மகாலட்சுமி, மயிலம் வடக்கு ஒன்றிய செயலாளர் மணிமாறன், அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story