மதுவில் விஷம் கலந்து குடித்து ஊராட்சி ஒன்றிய அலுவலக ஊழியர் தற்கொலை


மதுவில் விஷம் கலந்து குடித்து ஊராட்சி ஒன்றிய அலுவலக ஊழியர் தற்கொலை
x

நாகர்கோவிலில் மதுவில் விஷம் கலந்து குடித்து ஊராட்சி ஒன்றிய அலுவலக ஊழியர் தற்கொலை செய்து கொண்டார்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்,

நாகர்கோவிலில் மதுவில் விஷம் கலந்து குடித்து ஊராட்சி ஒன்றிய அலுவலக ஊழியர் தற்கொலை செய்து கொண்டார்.

தற்கொலை

நாகர்கோவில் வடசேரி காந்திஜி நகரை சேர்ந்தவர் ஏவி லாரன்ஸ் (வயது 56). இவா் தக்கலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். கடந்த சில நாட்களாக இவர் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். மேலும் அடிக்கடி மதுகுடித்து விட்டு வீட்டில் உள்ளவர்களிடம் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதனால் உறவினர்கள் அவரை கண்டித்துள்ளனர்.

இந்த நிலையில் சம்பவத்தன்று ஏவி லாரன்ஸ் வீட்டில் வைத்து மதுவில் விஷம் கலந்து குடித்து மயங்கி கிடந்தார். உடனே உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் போில் வடசேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story