ஊராட்சி பெண் வார்டு உறுப்பினர் மர்ம சாவு-கொலையா? தற்கொலையா? போலீஸ் விசாரணை


ஊராட்சி பெண் வார்டு உறுப்பினர் மர்ம சாவு-கொலையா? தற்கொலையா? போலீஸ் விசாரணை
x

பெத்தநாயக்கன்பாளையம் அருகே ஊராட்சி பெண் வார்டு உறுப்பினர் ரம்யா மர்மமான முறையில் இறந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சேலம்

ஊராட்சி பெண் வார்டு உறுப்பினர் மர்ம சாவு-கொலையா? தற்கொலையா? போலீஸ் விசாரணைபெத்தநாயக்கன்பாளையம்:

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

பெண் வார்டு உறுப்பினர்

சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் அருகே உள்ள ஆரியபாளையம் பகுதியை சேர்ந்தவர் அண்ணாதுரை. இவருடைய மகள் ரம்யா (வயது 26). எம்.எஸ்சி., பி.எட். படித்துள்ளார்.

மேலும் இவர் ஆரியபாளையம் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினராகவும் இருந்தார். இந்த நிலையில் கடந்த 13.6.2022 அன்று ஆரியபாளையம் மேற்கு காடு பகுதியை சேர்ந்த வெற்றிவேல் என்பவருக்கும், வார்டு உறுப்பினர் ரம்யாவுக்கும் திருமணம் நடந்தது. வெற்றிவேல் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார்

மர்ம சாவு

ெதாடர்ந்து அதே பகுதியில் உள்ள கணவர் வீட்டில் ரம்யா வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் ரம்யா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக, அவரது கணவர் வீட்டார் அண்ணாதுரைக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் தனது உறவினர்களுடன் வெற்றிவேல் வீட்டுக்கு சென்றார். அங்கு மர்மமான முறையில் ரம்யா பிணமாக கிடந்ததாக தெரிகிறது. இது குறித்து ஏத்தாப்பூர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் ரம்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

வேறு பெண்ணுடன் தொடர்பு

இதனிடையே ரம்யாவின் தாயார் அலமேலு ஏத்தாப்பூர் ேபாலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், ஊராட்சி மன்ற உறுப்பினராக எனது மகள், மிகவும் தைரியசாலி. மக்கள் சேவையாற்றி வந்துள்ளார். இந்த நிலையில் அவருக்கு கடந்த 57 நாட்களுக்கு முன்பு வெற்றிவேல் என்பவரை திருமணம் செய்து வைத்தோம். திருமணத்துக்கு பின்னர் வெற்றிவேலுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதனால் எனது மகள் மற்றும் நாங்கள் கண்டித்தும், அவர் கேட்கவில்லை.

இது தொடர்பாக ரம்யாவுக்கும், வெற்றிவேலுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் திடீரென எனது மகள் இறந்து விட்டதாக தகவல் கொடுத்தனர். எனது மகள் தற்கொலை செய்யும் அளவுக்கு கோழை அல்ல. அவர் தலையில் காயம் உள்ளது. எனவே அவரது சாவில் மர்மம் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

கொலையா? 

இதன் பேரில் ஏத்தாப்பூர் போலீசார் மர்ம சாவு என வழக்குப்பதிவு செய்து, ரம்யா கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் ரம்யாவுக்கு திருமணம் ஆகி 57 நாட்கள் மட்டுமே ஆவதால் ஆத்தூர் ஆர்.டி.ஓ. விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. ஊராட்சி பெண் வார்டு உறுப்பினர் இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story