ஒப்பிலியப்பன் கோவிலில் பங்குனி பிரம்மோற்சவ விழா


ஒப்பிலியப்பன் கோவிலில் பங்குனி பிரம்மோற்சவ விழா
x

ஒப்பிலியப்பன் கோவிலில் பங்குனி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தஞ்சாவூர்

திருவிடைமருதூர்:

ஒப்பிலியப்பன் கோவிலில் பங்குனி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

ஒப்பிலியப்பன்கோவில்

கும்பகோணம் அருகேயுள்ள திருநாகேஸ்வரத்தில் ஒப்பிலியப்பன்கோவில் என்னும் வேங்கடாசலபதி கோவில் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் பங்குனி பிரம்மோற்சவ விழா 12 தினங்களுக்கு நடைபெறுவது வழக்கம்.. இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி உற்சவர் பெருமாள், பூமிதேவி தாயாருடன் தங்க கொடிமரம் அருகே எழுந்தருள பட்டாட்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கருடாழ்வார் சின்னம் வரையப்பெற்ற கொடிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. பின்னர் கொடிமரத்தில் ஏற்றி வைக்கப்பட்டது

தீர்த்தவாரி

தொடர்ந்து கொடிமரத்திற்கும், பெருமாளுக்கும், தாயாருக்கும் தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 18-ந்தேதி தங்கரதம் வடம் பிடித்தலும், புஷ்கரணியில் தீர்த்தவாரியும் நடைபெறுகிறது. 21-ந்தேதி மூலவர் சன்னதியில் அன்னப்பெரும்படையலும், புஷ்பயாகமும், விடையாற்றியும் நடக்கிறது.


Related Tags :
Next Story