கல்யாண பசுபதீஸ்வரா் கோவிலில் பங்குனி திருவிழா நாளை கொடியேற்றம் தொடக்கம்


கல்யாண பசுபதீஸ்வரா் கோவிலில் பங்குனி திருவிழா நாளை கொடியேற்றம் தொடக்கம்
x

கரூா் கல்யாண பசுபதீஸ்வரா் கோவிலில் பங்குனி திருவிழா கொடியேற்றம் நாளை நடக்கிறது.

கரூர்

பங்குனி திருவிழா

கரூரில் பிரசித்தி பெற்ற அலங்காரவல்லி, சவுந்திரநாயகி உடனாகிய கல்யாண பசுபதீஸ்வரர் சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அந்தவகையில் இந்தாண்டு பங்குனி திருவிழா நாளை (செவ்வாய்க்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

இதனையொட்டி கோவிலில் நாளை காலை 10.40 மணிக்கு மேல் 11.30 மணிக்குள் கொடியேற்று விழா நடைபெற உள்ளது. மாலை 6.30 மணியளவில் சூர்ய பிரபையில் சாமி திருவீதியுலா நடைபெறுகிறது.

5-ந்தேதி தேரோட்டம்

தொடர்ந்து தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் நந்தி வாகனம், அன்ன வாகனம், பூத வாகனம், பூதகி வாகனம், ரிஷப வாகனம், திருக்கயிலாய வாகனம், யானை வாகனம், குதிரை வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் சுவாமி வீதியுலா நடைபெறுகிறது. ஏப்ரல் மாதம் 3-ந்தேதி திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் ஏப்ரல் மாதம் 5-ந்தேதி நடைபெற உள்ளது. 6-ந்தேதி நடராஜ மூர்த்திக்கு தீர்த்தவாரியும், 7-ந்தேதி விடையாற்றி உற்சவமும், 8-ந்தேதி ஊஞ்சல் உற்சவமும் நடைபெற உள்ளது. விழா நாட்களில் சொற்பொழிவும், இசைநிகழ்ச்சியும் நால்வர் அரங்கில் நடைபெறுகிறது.


Next Story