மகாபுவனகாந்தாரி அம்மன் கோவில் பங்குனி திருவிழா
கோவில்பட்டி மகாபுவனகாந்தாரி அம்மன் கோவில் பங்குனி திருவிழாவில் பக்தர்கள் பூக்குழி இறங்கினர்.
தூத்துக்குடி
கோவில்பட்டி:
கோவில்பட்டி செல்லபாண்டியன் நகர் மகாபூன காந்தாரி அம்மன் கோவில் 57-ம் ஆண்டு பொங்கல் திருவிழா கடந்த 28-ம் தேதி தொடங்கி நடந்து வந்தது. நேற்று முன்தினம் காலையில் அம்மன் குடி அழைப்பும், சிறப்பு அபிஷேகமும், தொடர்ந்து அக்னிசட்டி வீதி உலாவும், 12 மணிக்கு உச்சிக்கால பூஜையும் நடந்தது.
இரவு 8 மணிக்கு முளைப்பாரி ஊர்வலமும் 9 மணிக்கு 108 மற்றும் 54 அக்னி சட்டி வீதி உலாவும், இரவு 11 மணி அளவில் பூக்குழி விழாவும் நடைபெற்றது. விரதம் இருந்த ஏராளான ஆண், பெண் பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். இதனை தொடர்ந்து சாமக்கோடையும், அதிகாலை 2 மணிக்கு பொங்கல் விழாவும் நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்
Related Tags :
Next Story