முள்ளாட்சி மாரியம்மன் கோவிலில் பங்குனி திருவிழா
திருத்துறைப்பூண்டி முள்ளாட்சி மாரியம்மன் கோவிலில் பங்குனி திருவிழா நடந்தது.
திருத்துறைப்பூண்டி:
திருத்துறைப்பூண்டியில் பிரவிமருந்தீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான முள்ளாட்சி மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் 15 தினங்களுக்கு தினசரி மண்டகப்படியை முன்னிட்டு, சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், சிறப்பு வழிபாடுகளும் நடைபெறுவது வழக்கம். திருத்துறைப்பூண்டி வர்த்தக சங்கத்தின் மண்டகப்படியை முன்னிட்டு நேற்று காலை சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள், தொடர்ந்து தீபாராதனையும் சிறப்பு வழிபாடும் நடந்தது. பின்பு அலங்கரிக்கப்பட்டு வாகனத்தில் சாமி வீதிஉலா நடந்தது.. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் முருகையன், வர்த்தக சங்க தலைவர் செந்தில்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.