செண்பகவல்லி அம்மன் கோவில் பங்குனி திருவிழா


செண்பகவல்லி அம்மன் கோவில் பங்குனி திருவிழா
x
தினத்தந்தி 6 April 2023 12:15 AM IST (Updated: 6 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவில் பங்குனி திருவிழா கொடியேற்றம் நடந்தது.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டியில் செண்பகவல்லி அம்மன் கோவில் பங்குனி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர்.

பங்குனி திருவிழா

கோவில்பட்டியில் செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாத சுவாமி கோவில் பங்குனி திருவிழா கொடியேற்றத்தை முன்னிட்டு திருவிழா கொடியேற்ற நிகழ்ச்சியை முன்னிட்டு அதிகாலையில் கோவில் நடைதிறக்கப்பட்டது. சுவாமி, அம்பாள், நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. காலை 6 மணிக்கு கொடி ஏற்ற நிகழ்ச்சி நடந்தது.

கலந்து கொண்டவர்கள்

நிகழ்ச்சியில் இந்து அறநிலையத்துறைஉதவி ஆணையாளர் சங்கர், கோவில் நிர்வாக அதிகாரி வெள்ளைச்சாமி, நகரசபை தலைவர் கா. கருணாநிதி, கோவில்பட்டி பஞ்சாயத்து யூனியன் தலைவர் கஸ்தூரி சுப்புராஜ், ஒன்றிய தி.மு.க. செயலாளர் முருகேசன், பிராமணர் சங்க தலைவர் ராதா கிருஷ்ணன், செயலாளர் ராமசுப்பிரமணியன், கம்மவார் சங்க தலைவர் ரீஜென்ட் எஸ். ஹரிபாலகன், செயலாளர் எம் அழகர்சாமி, பொருளாளர் என். ராதாகிருஷ்ணன், துணைதலைவர் பட்டுராஜன், வணிக வைசிய சங்க தலைவர் வெங்கடேஷன், செயலாளர் வேல்முருகன், துணை தலைவர் மாதவராஜ், முன்னாள் அறங்காவலர் திருப்பதி ராஜா, பாட்டாளி மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இரவு 7 மணிக்கு பூங்கோவில் சப்பரத்தில் சுவாமி- அம்மன் திருவீதி உலா நடைபெற்றது.

தெப்பத்திருவிழா

திருவிழாவை முன்னிட்டு தினமும் மண்டகப்படிதாரர் சார்பில் காலை 8 மணிக்கும், இரவு 7 மணிக்கும் சுவாமி- அம்மன் திருவீதி உலா நடைபெறுகிறது. வருகிற 13-ந்தேதி காலை 9.15 மணிக்கு கம்மவார் சங்கம் சார்பில் தேரோட்டமும், 14-ந்தேதி மாலை 6 மணிக்கு ஆயிர வைசிய காசுக்கார செட்டி பிள்ளைகள் சங்கம் சார்பில் தீர்த்த வாரி திருவிழாவும், 15-ந்தேதி இரவு 7 மணிக்கு நாடார் உறவின்முறை சங்கம் சார்பில் தெப்ப திருவிழாவும் நடைபெறுகிறது.

திருவிழாவை முன்னிட்டு கோவில் வளாகத்தில் ராட்சச ராட்டினங்கள், சிறுவர்களுக்கான ராட்டினங்கள் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள், கடைகள் அமைக்கப் பட்டுள்ளன. பாதுகாப்பு ஏற்பாடுகளை கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேஷ் செய்துள்ளார். தீயணைப்பு அதிகாரி சுந்தர்ராஜ் தலைமையில் தீயணைப்பு வாகனம் தயார் நிலையில் நிறுத்தப் பட்டுள்ளது. கோவில் வளாகத் திலுள்ள மண்டபத்தில் மருத்துவ வசதியும் செய்யப் பட்டுள்ளது.


Next Story