வடசென்னிமலை பாலசுப்பிரமணியசுவாமி கோவிலில் பங்குனி தேரோட்டம்-5-ந் தேதி நடக்கிறது
வடசென்னிமலை பாலசுப்பிரமணியசுவாமி கோவிலில் பங்குனி தேரோட்டம் வருகிற 5-ந் தேதி நடக்கிறது.
தலைவாசல்:
பங்குனி உத்திர திருவிழா
சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே வட சென்னிமலை பாலசுப்பிரமணியசுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கடந்த 28-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. காட்டுக்கோட்டை புதூர் கட்டளைதாரர்கள் கொடியேற்றி தேர் திருவிழாவை ெதாடங்கி வைத்தனர். விழா வருகிற 8-ந் தேதி வரை நடக்ககிறது.
தினமும் சுவாமிக்கு சிறப்பு பூஜையும், வழிபாடும் நடந்து வருகிறது. ஒவ்வொரு நாளும் இரவு நேரத்தில் இன்னிசை நிகழ்ச்சி, பட்டிமன்றம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு நாளும் சாமி கிரிவலம் எடுத்து வருகின்றனர். நேற்று காலை சுவாமிக்கு பால், பன்னீர், தேன், சந்தனம், தயிர் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு வழிபாடு நடந்தது. தொடர்ந்து சாமி கிரிவலம் வரும் நிகழ்ச்சி நடந்தது.
தேரோட்டம்
பங்குனி உத்திர தேரோட்டம் வருகிற 5-ந் தேதி மாலை 4.35 மணிக்கு தொடங்குகிறது. தேரோட்டத்தை காட்டுக் கோட்டைபுதூர் கட்டளைதாரர்கள் ராஜசேகரன், அழகப்பன், செல்வம், தங்கவேல் வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைக்கின்றனர். 7-ந் தேதி சப்தாவரணம் நிகழ்ச்சி நடக்கிறது. சாமி பல்லக்கில் வீதி உலா நடக்கிறது.
இரவு பல்சுவை நிகழ்ச்சி நடைபெறுகிறது. 8-ந் தேதி மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சியுடன் விழா முடிவடைகிறது. தேரோட்டத்தை முன்னிட்டு விழா குழுவின் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குகின்றனர்.விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் குலசேகரன், தக்கார் பரமேஸ்வரன் கோவில் ஆய்வாளர் அருள்மணி மற்றும் கட்டளைதாரர்கள் செய்து வருகின்றனர்.