சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த பானிப்பூரி கடைக்காரர் 'போக்சோ'வில் கைது


சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த பானிப்பூரி கடைக்காரர் போக்சோவில் கைது
x

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த பானிப்பூரி கடைக்காரர் ‘போக்சோ’வில் கைது செய்யப்பட்டார்.

திருவண்ணாமலை

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த பானிப்பூரி கடைக்காரர் 'போக்சோ'வில் கைது செய்யப்பட்டார்.

கீழ்பென்னாத்தூர் தாலுகா வேட்டவலம் பூரிக்காரன் தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 38). இவர் அந்த பகுதியில் பானிப்பூரி கடை வைத்து நடத்தி வருகிறார். 17 வயது சிறுமியை மிரட்டி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், இதை வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.

சிறுமிக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டு உள்ளது. சிறுமியை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது சிறுமி கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. விசாரணையில் பாணிபூரிகடைக்காரர் செந்தில்குமார் தன்னை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததை கூறினார். அதை தொடர்ந்த சிறுமி அவரது பாட்டியுடன் திருவண்ணாமலை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் 'போக்சோ' சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து செந்தில்குமாரை கைது செய்தனர்.


Next Story