திருமூர்த்தி வனப்பகுதியில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால், பஞ்சலிங்க அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

திருமூர்த்தி வனப்பகுதியில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால், பஞ்சலிங்க அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
x

திருமூர்த்தி வனப்பகுதியில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால், பஞ்சலிங்க அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர்

தளி

திருமூர்த்தி வனப்பகுதியில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால், பஞ்சலிங்க அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

பஞ்சலிங்க அருவி

உடுமலையை அடுத்த திருமூர்த்திமலையில் பஞ்சலிங்க அருவி உள்ளது. உடுமலை வனச்சரகத்தின் அடர்ந்த வனப்பகுதியில் உள்ள இந்த அருவிக்கு மேல் குருமலை, கீழ்குருமலை, குழிப்பட்டி பகுதியில் உற்பத்தியாகின்ற கொட்டையாறு, பாரப்பட்டியாறு, குருமலைஆறு, கிழவிப்பட்டிஆறு, உப்புமண்ணபட்டிஆறு, பாலாறு, உழுவியாறு உள்ளிட்டவை நீராதாரமாக உள்ளது. வனப்பகுதியில் மழைப்பொழிவு ஏற்படும்போது ஆறுகளில் நீர்வரத்தை பெறுகிறது. வனப்பகுதியில் பல்வேறு பகுதியில் ஓடிவருகின்ற ஆறுகள் பஞ்சலிங்கங்களுக்கு அருகில் ஒன்று சேர்ந்து அருவியாக கொட்டுகிறது. அருவியில் விழுகின்ற மூலிகை தண்ணீரில் குளித்து புத்துணர்வு பெறுவதற்காக தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் திருமூர்த்திமலைக்கு வருகை தருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக வனப்பகுதியில் அவ்வப்போது சாரல் மழை பெய்து வருகிறது. அதுமட்டுமின்றி வானமும் இருள் சூழ்ந்து மேகமூட்டமாக காணப்படுவதுடன் கனமழை பெய்வதற்கான சூழலும் நிலவி வருகிறது. இதனால் பஞ்சலிங்க அருவிக்கு நீர்வரத்து அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் ஏற்பட்டு உள்ளது.இதையடுத்து கோவில் நிர்வாகம் சுற்றுலா பயணிகளுக்கு அருவியில் குளிப்பதற்கு நேற்று தடை விதித்தது. இதனால் திருமூர்த்திமலைக்கு வருகை தந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

பாலாற்றில் குளித்தனர்

அதைத் தொடர்ந்து கோவில் முன்பு உள்ள பாலாற்றில் குளித்து மகிழ்ந்ததுடன் மும்மூர்த்திகளை சாமி தரிசனம் செய்து விட்டு திரும்பிச் சென்றனர். அதுமட்டுமின்றி மலையடிவாரத்தில் உள்ள கோவில் உண்டியல்களை பாதுகாக்கும் பொருட்டு பிளாஸ்டிக் பைகளை கொண்டு கோவில் நிர்வாகத்தினர் கட்டி உள்ளனர்.அத்துடன் அருவிக்கு ஏற்பட்டுள்ள நீர்வரத்தை தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.மேலும் அருவியின் நீராதாரங்கள் இயல்பு நிலைக்கு திரும்பினால் மட்டுமே அருவியில் குளிப்பதற்கு அனுமதி வழங்கப்படும். இல்லையென்றால் தடை தொடர்வதற்கான சூழலே நிலவுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் அனுமதி வழங்கப்படுவதை எதிர்பார்த்து உள்ளனர்.

Next Story