சேலம் ரெயில்வே கோட்ட மேலாளராக பங்கஜ்குமார் சின்கா பொறுப்பேற்பு
சேலம் ரெயில்வே கோட்ட மேலாளராக பங்கஜ்குமார் சின்கா பொறுப்பேற்றுக்கொண்டார்.
சூரமங்கலம்:
சேலம் ரெயில்வே கோட்ட மேலாளராக இருந்த கவுதம் ஸ்ரீனிவாஸ் இடமாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து சேலம் ெரயில்வே கோட்டத்தின் 8-வது புதிய மேலாளராக பங்கஜ்குமார் சின்ஹா நேற்று பொறுப்பேற்று கொண்டார். இவர் இந்திய ெரயில்வே பணியில் 1992-ம் ஆண்டு கிழக்கு ெரயில்வேயில் மேற்குவங்க மாநிலத்தில் உதவி பொருள் மேலாளராக பணியில் சேர்ந்தார். அதன்பிறகு கிழக்கு மத்திய ெரயில்வேயில் துணை முதன்மை கண்காணிப்பு அலுவலராக 5 ஆண்டுகள் பணிபுரிந்தார். சோன்பூர் கோட்ட கூடுதல் மேலாளராக 3 ஆண்டுகள் பணியாற்றினார். பீகாரில் ெரயில்வே சக்கர உற்பத்தி தொழிற்சாலையில் முதன்மை தலைமை மெட்டீரியல் மேலாளராக பணியாற்றினார். இவரது சிறப்பான சேவைக்காக பொது மேலாளர் அளவில் மற்றும் ெரயில்வே வாரிய அளவிலும் பல விருதுகளை பெற்றுள்ளார். தற்போது இவர் சேலம் ெரயில்வே கோட்ட மேலாளராக பொறுப்பேற்றுள்ளார். புதிய மேலாளராக பொறுப்பேற்ற பங்கஜ்குமார் சின்காவுக்கு கோட்டத்தில் பணிபுரியும் ெரயில்வே அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.