பண்ணாரி அம்மன் கோவிலில் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி இந்திரா பானர்ஜி தரிசனம்
பண்ணாரி அம்மன் கோவிலில் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி இந்திரா பானர்ஜி தரிசனம் செய்தாா்.
ஈரோடு
சத்தியமங்கலம்
சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி இந்திரா பானர்ஜி கர்நாடகா மாநிலத்தில் இருந்து கோவை வரும் வழியில் நேற்று மாலை ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்த பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவிலுக்கு வருகை தந்தார். அவருடன் 3 நீதிபதிகள் வந்திருந்தனர்.
இதைத்தொடர்ந்து நீதிபதி இந்திரா பானர்ஜிக்கு அறநிலையத்துறை உதவியாளர் இளையராஜா, இணை ஆணையாளர் பரஞ்ஜோதி மற்றும் அறங்காவலர்கள், கோவில் நிர்வாகத்தினர் மங்கள இசையுடன் பூரண கும்ப மரியாதை வரவேற்பு அளித்தனர்.
பின்னர் நீதிபதி கோவிலுக்குள் சென்று அம்மனை பயபக்தியுடன் தரிசனம் செய்தார். அதன்பின்னர் அங்கிருந்து கோவை விமான நிலையம் புறப்பட்டு சென்றார். கோவையில் இருந்து டெல்லி செல்கிறார்.
Related Tags :
Next Story