பாதிக்கப்பட்ட பகுதிகளை பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ.ஆய்வு


பாதிக்கப்பட்ட பகுதிகளை பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ.ஆய்வு
x

பாதிக்கப்பட்ட பகுதிகளை பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ.ஆய்வு செய்தார்.

மயிலாடுதுறை

திருவெண்காடு:

திருவெண்காடு அருகே உள்ள பெருந்தோட்ட ஊராட்சியில் கன மழையால் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்து உள்ளன. ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்களில் மழைநீரில் மூழ்கி பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதை தொடர்ந்து கோசாலை தெரு, அகர பெருந்தோட்டம், மந்தகரை, பீச் தெரு உள்ளிட்ட இடங்களில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பன்னீர் செல்வம் எம்.எல்.ஏ. பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார். இந்த ஆய்வின் போது சீர்காழி கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பஞ்சு குமார், முன்னாள் ஊராட்சி துணை தலைவர் கோவிந்தராஜ் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.


Related Tags :
Next Story