பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம்


பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம்
x

காரியாபட்டியில் பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாமினை அமைச்சர் தங்கம் தென்னரசு தொடங்கி வைத்தார்.

விருதுநகர்

காரியாபட்டி,

காரியாபட்டியில் பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாமினை அமைச்சர் தங்கம் தென்னரசு தொடங்கி வைத்தார்.

மருத்துவ முகாம்

காரியாபட்டியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இலவச பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் காப்பீட்டுத் திட்ட பயனாளிகள் பதிவு செய்யும் முகாம் நடைபெற்றது. இந்த முகாமினை அமைச்சர் தங்கம் தென்னரசு குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். மாவட்ட வருவாய் அலுவலர் ரவிக்குமார் தலைமை தாங்கினார். பின்னர் முகாமில் வழங்கப்பட்டு வரும் மருத்துவ பரிசோதனைகள், சிறப்பு ஆலோசனை, சிறப்பு சிகிச்சைகள் ஆகியவற்றை பார்வையிட்டார்.

மக்களைத்தேடி மருத்துவம்

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அம்மையார் மகப்பேறு திட்டத்தின் கீழ் 10 தாய்மார்களுக்கு தாய், சேய் நலப்பெட்டகம் மற்றும் சித்த மருத்துவத்தின் சஞ்சீவி பெட்டகங்களையும், மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் 10 பயனாளிகளுக்கு மருந்து பெட்டகங்களையும், 5 பயனாளிகளுக்கு முதல்-அமைச்சரின் விரிவான காப்பீடு திட்டத்தின் கீழ் அடையாள அட்டைகளையும் அமைச்சர் தங்கம் தென்னரசு வழங்கினார்.

முகாமில் அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியதாவது:-

ஒரு நாடு வளம் பெற வேண்டும் என்றால் கல்வி மற்றும் சுகாதாரத்தில் சிறந்து விளங்க வேண்டும். கல்வி, தொழில் வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முன்னேறி இருந்தாலும், அதற்கு அடிப்படையாக இருப்பது உடல் ஆரோக்கியம் தான்.

உட்கட்டமைப்பு வசதி

ஆரோக்கியமாக இருப்பதற்கு நோய் வருவதற்கு முன் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுக்கக்கூடிய அளவிற்கு உட்கட்டமைப்பு வசதிகள் இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முகாமில் இணை இயக்குனர் முருகவேல், துணைஇயக்குனர் கவுசல்யா, காரியாபட்டி பேரூராட்சித்தலைவர் செந்தில், ஊராட்சி ஒன்றியக்குழுத்தலைவர் பொன்னுத்தம்பி, மாவட்ட கவுன்சிலர்கள் தங்க தமிழ்வாணன், கமலிபாரதி, ஒன்றிய செயலாளர்கள் செல்லம், கண்ணன், மாவட்ட பொருளாளர் வேலுச்சாமி, பேரூராட்சி கவுன்சிலர்கள் செல்வராஜ், முகமது முஸ்தபா, சங்கரேஸ்வரன், மாவட்ட பிரதிநிதி சங்கரபாண்டியன், மாவட்ட விவசாய தொழிலாளர் அணி தலைவர் தங்கப்பாண்டியன், துணைத்தலைவர் கல்யாணி, அரசு அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story