பாபநாசம் தாமிரபரணி ஆற்றை சுத்தம் செய்யும் பணி


பாபநாசம் தாமிரபரணி ஆற்றை சுத்தம் செய்யும் பணி
x

பாபநாசம் தாமிரபரணி ஆற்றை சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது.

திருநெல்வேலி

விக்கிரமசிங்கபுரம்:

சிவந்திபுரம் ஊராட்சி மன்றம் சார்பில், பாபநாசம் தாமிரபரணி ஆற்றில் உறைகிணறு அமைந்த பகுதியில் சுத்தம் செய்யும் பணி நடந்தது. சிவந்திபுரம் ஊராட்சி தலைவர் ஜெகன் தலைமை தாங்கினார். அம்பை யூனியன் தலைவர் பரணி சேகர், அம்பை நகராட்சி தலைவர் கே.கே.சி.பிரபாகரன் பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சமூக ஆர்வலர் கிரிக்கெட் மூர்த்தி வரவேற்றார். தூய்மைப்பணியை தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் பிரபாகரன் தொடங்கி வைத்தார். இந்த பணியானது நேற்று தொடங்கி வருகிற 23-ந் தேதி வரை நடைபெறுகிறது.

இதில் விக்கிரமசிங்கபுரம் நகராட்சி சுகாதார ஆய்வாளர் பொன் வேல்ராஜ், சிவந்திபுரம் ஊராட்சி எழுத்தர் வேலு, சுகாதார மேஸ்திரி பெல்பின், மாவட்ட கவுன்சிலர் அருண்தபசு பாண்டியன், ஒன்றிய கவுன்சிலர் சரஸ்வதி தங்கராஜா, சிவந்திபுரம் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பாக்கியலட்சுமி, ராமர், சுப்புலட்சுமி, நெடுஞ்செழியன், பேபி நிஷா, அன்பரசன், சகாய சந்தோஷ் சுமிதா, சுசிலா, முத்துலட்சுமி, முருகேஸ்வரி, இஸ்ரவேல் மற்றும் விக்கிரமசிங்கபுரம் கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story