காகித ஆலை தொழிலாளர்கள் உண்ணாவிரதம்


காகித ஆலை தொழிலாளர்கள் உண்ணாவிரதம்
x

காகித ஆலை தொழிலாளர்கள் உண்ணாவிரதம் நடந்தது.

கரூர்

புகழூர் காகித ஆலை தொழிலாளர் உரிமை அமைப்பு சங்கம் சார்பில் 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காகித ஆலை மெயின் கேட் அருகே நேற்று உண்ணாவிரதம் நடைபெற்றது. இதற்கு சங்க தலைவர் பொன். இளங்கோவன் தலைமை தாங்கினார். இதில், சங்க செயலாளர் சக்திவேலன், நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். கடந்த காலங்களில் இரண்டு பண்டிகைக்கும் வழங்கப்பட்ட போனஸ் குறைக்கப்பட்டது. லாபம் வரும் போது உரிய போனஸ் வழங்குவதாக நிர்வாகம் கூறியது. ஆனால் அந்த போனசை கடந்த முறை குறைக்கப்பட்ட தொகையோடு இந்த வருட போனசையும் வழங்க வேண்டும். 10-வது ஊதிய பேச்சு வார்த்தையை முத்தரப்பு பேச்சுவார்த்தையாக மாற்றி உடனடியாக நடத்த வேண்டும். 2 முறை ஒத்திவைக்கப்பட்ட அங்கீகார தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என்ற 3 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி இந்த உண்ணாவிரதம் நடந்தது. காலை 8 மணிக்கு தொடங்கிய உண்ணாவிரதம் மாலை 6 மணி வரை நடைபெற்றது.


Next Story