கருப்பு பட்டை அணிந்து பணிக்கு சென்ற காகித ஆலை தொழிலாளர்கள்
காகித ஆலை தொழிலாளர்கள் கருப்பு பட்டை அணிந்து பணிக்கு சென்றனர்
கரூர்
புகழூர் காகித ஆலையில் கடந்த காலங்களில் ஜீரோ ஸ்டாக் என்ற உயர்ந்த நிலையை அடைந்தபோது வழங்கப்பட்ட வெகுமதியில் நிரந்தர தொழிலாளர்கள் மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் என்ற பாகுபாடு பார்க்காமல் வழங்கப்பட்டது. இந்தநிலையில் நிலையில் 2021-22-ம் ஆண்டு வழங்குகின்ற வெகுமதியில் பாரபட்சம் கூடாது என்ற கோரிக்கை மற்றும் கண்டனத்தை அலட்சியப்படுத்தும் நோக்கத்துடன் தொடர்ந்து செயல்படும் காகித ஆலை அதிகாரிகளை கண்டித்தும் நேற்று காகித ஆலை ஒப்பந்த தொழிலாளர் முன்னேற்ற சங்கம், காகித ஆலை அண்ணா ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கம், அனைத்து சங்க ஒப்பந்த தொழிலாளர்களும் கருப்பு பட்டை அணிந்து கொண்டு காகித ஆலை நிர்வாகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பணிக்கு சென்றனர்.
Related Tags :
Next Story