சேதமடைந்து கிடக்கும் பி.ஏ.பி. கால்வாய் கரை மண்பாதை


சேதமடைந்து கிடக்கும் பி.ஏ.பி. கால்வாய் கரை மண்பாதை
x
திருப்பூர்


பி.ஏ.பி. பாசனத்திட்ட வாய்க்கால்களின் கரைகளில் சேதமடைந்துள்ள மண் பாதையை சீரமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பி.ஏ.பி. கால்வாய் கரை பாதை

பி.ஏ.பி. பாசனத் திட்டத்தின் உயிர்நாடியாக திருமூர்த்தி அணை விளங்குகிறது. கால்வாய்கள் கட்டப்பட்டபோதே அதை பராமரிப்பதற்கும், நீர் மேலாண்மையை முறை படுத்துவதற்கும் மண்பாதை அமைக்கப்பட்டது. அந்த பாதை எண்ணற்ற விவசாயிகளுக்கு இன்றளவும் உறுதுணையாக இருந்து வருகிறது.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

பி.ஏ.பி. பாசனத் திட்டத்தில் கால்வாய்களின் கரையில் அமைக்கப்பட்ட மண்பாதை சேதமடைந்து விட்டது. அவை குண்டும், குழியுமாக மாறி வருவதுடன் கற்கள் பெயர்ந்தும் காணப்படுகிறது. இதனால் அதில் செல்லும் வாகனங்கள் நிலை தடுமாறி கால்வாயில் விழுந்து விடும் சூழல் நிலவுகிறது. அப்போது கால்வாயில் தண்ணீர் சென்றால் உயிரிழப்பு ஏற்படும் வாய்ப்புகள் கூட உள்ளது.

நடவடிக்கை

மேலும் மிக முக்கியமாக பாதை சேமடைந்துள்ளதை சாதகமாகக் கொண்டு கால்வாயில் இருந்து குழாய் அமைத்து ஒருசில விவசாயிகள் தண்ணீர் திருடி வருகிறார்கள். எனவே கால்வாய்களின் கரையில் சேதமடைந்துள்ள மண்பாதையை சீரமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story