மதுரை ரெயில்வே குடியிருப்பில் கோவேறு கழுதைகள் அணிவகுப்பு


மதுரை ரெயில்வே குடியிருப்பில் கோவேறு கழுதைகள் அணிவகுப்பு
x

மதுரை ரெயில்வே குடியிருப்பில் கோவேறு கழுதைகள் அணிவகுப்பு

மதுரை

மகபூப்பாளையம்,

மதுரை மகபூப்பாளையம் பகுதியில் ரெயில்வே பணியாளர்கள் குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பில், கோட்ட ரெயில்வே மேலாளர் அலுவலகத்தின் கட்டுப் பாட்டில் உள்ள மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, நெல்லை, தென்காசி உள்ளிட்ட பகுதிகளில் பணியாற்றும் ரெயில்வே பணியாளர்கள், கோட்ட மேலாளர் மற்றும் அதிகாரிகள் ஆகியோர் வசித்து வருகின்றனர். இதற்கிடையே, அதிகாரிகள் குடியிருப்பு பகுதியில் நேற்று அதிகாலை சுமார் 20-க்கும் மேற்பட்ட கோவேறு கழுதைகள் ஊர்வலமாக சென்றன. இந்த கழுதைகள் எங்கிருந்து வந்தன, யாருக்கு சொந்த மானவை என்பது தெரியவில்லை.

இருப்பினும், குடியிருப்பு பகுதிக்குள் வந்த கோவேறு கழுதைகளை அங்கிருந்த சிறுவர், சிறுமிகள் மற்றும் குடியிருப்புவாசிகள் ஆர்வமுடன் பார்த்து ரசித்தனர். ஒரு சிலர், அவற்றை தங்களது செல்போனில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து கொண்டனர். மதுரை சுற்றுவட்டார பகுதிகளில் கோவேறு கழுதைகளின் பயன்பாடு மிகவும் குறைவாக உள்ள நிலையில், அதிக எண்ணிக்கையில் இந்த கழுதைகள் மதுரை ரெயில்வே குடியிருப்பை சுற்றித்திரிந்தது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.


Next Story