மின்விளக்குகள் எரியாததால் இருளில் மூழ்கி கிடக்கும் பரமக்குடி பஸ் நிலையம்


மின்விளக்குகள் எரியாததால் இருளில் மூழ்கி கிடக்கும் பரமக்குடி பஸ் நிலையம்
x
தினத்தந்தி 25 Sept 2022 12:15 AM IST (Updated: 25 Sept 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

மின்விளக்குகள் எரியாததால் பரமக்குடி பஸ் நிலையம் இருளில் மூழ்கி கிடக்கிறது. இதனால் பயணிகள் கடும் அவதி அடைகிறார்கள்.

ராமநாதபுரம்

பரமக்குடி,

மின்விளக்குகள் எரியாததால் பரமக்குடி பஸ் நிலையம் இருளில் மூழ்கி கிடக்கிறது. இதனால் பயணிகள் கடும் அவதி அடைகிறார்கள்.

இருளில் மூழ்கிய பஸ் நிலையம்

பரமக்குடி பஸ் நிலையத்திற்கு தினமும் நூற்றுக்கணக்கான அரசு மற்றும் தனியார் பஸ்கள் வந்து செல்கின்றது. அதில் ஆயிரக்கணக்கான பயணிகள் பஸ் நிலையத்திற்கு வருகின்றனர். குறிப்பாக இரவு நேரங்களில் வெளியூர்களில் இருந்து வரும் பயணிகளின் எண்ணிக்கையும் பரமக்குடியில் இருந்து வெளியூர்களுக்கு செல்லும் பயணிகளின் எண்ணிக்கையும் அதிக அளவில் உள்ளது.

எனவே அந்தப் பயணிகள் பஸ் ஏறுவதற்கும் இறங்குவதற்கும் பரமக்குடி பஸ் நிலைய வளாகத்திற்கு தான் வர வேண்டும். அப்படி இருக்கையில் பரமக்குடி பஸ் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள ஹைமாஸ் விளக்குகள் கடந்த சில மாதங்களாகவே எரியாமல் உள்ளது. அதேபோல் பஸ் நிலையம் பகுதியில் இருந்து தேசிய நெடுஞ்சாலை முதல் அண்ணா நகர் பகுதி வரை உள்ள தெரு விளக்குகளும் எரியாமல் கிடப்பதால் அப்பகுதி முழுவதும் இருளில் மூழ்கி உள்ளது.

பயணிகள் அவதி

இதனால் பஸ் நிலையத்தில் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் கடும் அவதி அடைகிறார்கள். குறிப்பாக தனியாக நிற்கும் பெண்களிடமும், பயணிகளிடமும் பிக் பாக்கெட் திருடர்கள் சகபயணிகள் போல் பேச்சு கொடுத்து அவர்கள் அசந்திருக்கும் நேரத்தில் அவர்களை தாக்கி அவர்களிடமிருந்து பணம் மற்றும் செல்போன்களை பறித்து செல்லும் அவலநிலை தொடர்கிறது. எனவே பஸ் நிலைய பகுதிகளில் பரமக்குடி நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொண்டு மின்விளக்குகளை எரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story