பரமன்குறிச்சி வட்டன்விளை முத்தாரம்மன்கோவில் ஐப்பசி கொடை விழா


பரமன்குறிச்சி வட்டன்விளை   முத்தாரம்மன்கோவில் ஐப்பசி கொடை விழா
x
தினத்தந்தி 7 Nov 2022 12:15 AM IST (Updated: 7 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

பரமன்குறிச்சி வட்டன்விளை முத்தாரம்மன்கோவில் ஐப்பசி கொடை விழா தொடங்கியது.

தூத்துக்குடி

உடன்குடி:

பரமன்குறிச்சி ஊராட்சி வட்டன்விளை முத்தாரம்மன் கோவில் ஐப்பசி வருடாந்திர கொடை விழாவை முன்னிட்டு நேற்று காலை 6 மணிக்கு கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. தொடர்ந்து யாகசாலைபூஜை நடந்தது. யாக சாலையில் இருந்து புனித நீர் எடுத்துகோவில் கோபுர கலசங்களுக்கு ஊற்றப்பட்டது. செல்வ விநாயகர், அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு ஆலங்கார பூஜை, வருஷாபிஷேகம் நடைபெற்றது. பகல் 11 மணிக்கு சிறப்பு புஷ்பாஞ்சலியும், அலங்கார பூஜையும் நடந்தது. இரவு 8 மணிக்கு பக்தி இன்னிசை நடைபெற்றது.

இன்று(திங்கட்கிழமை)இரவு 7 மணிக்கு திருவிளக்கு பூஜை, நள்ளிரவு 12 மணிக்கு அலங்கார தீபாராதனை, உச்சினிமாகாளி அம்மன் சிங்கவாகனத்தில் பவனி, நாளை(செவ்வாய்கிழமை) காலை 8 மணிக்கு 108 பால்குட ஊர்வலம், இரவு 8 மணிக்கு சுமங்கலிபூஜை, நள்ளிரவு 12 மணிக்கு அலங்கார பூஜை, சந்தனமாரியம்மன் கிளி வாகனத்தில் பவனி நடக்கிறது. 9-ந்தேதி பகல் 12 மணிக்கு அம்மன் மஞ்சள் நீராடி வீதியுலா, இரவு7 மணிக்கு கரகாட்டம், 10 மணிக்கு மாவிளக்கு பூஜை, நள்ளிரவு 12 மணிக்கு முத்தாரம்மன்பூஞ் சப்பரத்தில் பவனி, 10-ந்தேதி இரவு 8 மணிக்கு பக்தி இன்னிசை நடைபெறுகிறது.

இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர், ஊர்மக்கள் சிறப்பாக செய்துள்ளனர்.


Next Story