அக்காள் கணவரை மிரட்டிய துணை ராணுவ வீரர் கைது
அக்காள் கணவரை மிரட்டிய துணை ராணுவ வீரர் கைது செய்யப்பட்டார்.
விருதுநகர்
தாயில்பட்டி,
வெம்பக்கோட்டை அருகே உள்ள ஏழாயிரம்பண்ணை மருதுபாண்டியர் நகரை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 44). இவருடைய மனைவி மான்தேவி (40). குடும்பப் பிரச்சினை காரணமாக மனைவியை பிரிந்து பாலமுருகன் வசித்து வருகிறார். இந்தநிலையில் ஏழாயிரம் பண்ணை பஸ்நிறுத்தத்தில் பாலமுருகன் நின்று கொண்டிருந்த போது மான்தேவியின் தம்பி அசாமில் துணை ராணுவப்படையில் பணியாற்றும் மணிமாறன் (37), பாலமுருகனை அடித்ததுடன் கொலை மிரட்டல், விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பாலமுருகன் கொடுத்த புகாரின் பேரில் ஏழாயிரம் பண்ணை சப்-இன்ஸ்பெக்டர் செய்யது இப்ராகிம் வழக்குப்பதிவு செய்து மணிமாறனை கைது செய்தார்.
Related Tags :
Next Story