பரணி தீபம் தரிசன அனுமதி சீட்டு முறைகேடாக விற்பனையா?

பரணி தீபம் தரிசன அனுமதி சீட்டு முறைகேடாக விற்பனையா?
x

பரணி தீபம் தரிசன அனுமதி சீட்டு முறைகேடாக விற்பனை செய்யப்பட்டதாக சமூக வலைதளங்களில் வீடியோ வைரலானதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவண்ணாமலை

பரணி தீபம் தரிசன அனுமதி சீட்டு முறைகேடாக விற்பனை செய்யப்பட்டதாக சமூக வலைதளங்களில் வீடியோ வைரலானதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் மகாதீபத்திருவிழாவையொட்டி நேற்று அதிகாலை கோவிலில் பரணிதீபம் ஏற்றப்பட்டது. அனுமதி சீட்டு பெற்றவர்கள் மட்டுமே கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர். ஏராளமான பக்தர்கள் கோவிலுக்குள் செல்ல முற்பட்டனர். எனினும் அவர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. பரணி தீப தரிசனம் செய்ய லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் வெளியே காத்திருந்தனர். எப்படியாவது உள்ளே சென்று விடலாம் என அவர்கள் முயன்ற வண்ணம் இருந்தனர்.

இந்த நிலையில் பரணி தீப் அனுமதி சீட்டு சிலரால் ரூ.2 ஆயிரம் முதல் ரூ.4 ஆயிரம் வரை விற்கப்பட்டதாக கூறப்படுகிறது. அனுமதி சீட்டினை சிலர் முறைகேடாக விற்பனை செய்வது போன்ற வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலானது.

இதுகுறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Next Story