பராசக்தி மாரியம்மன் கோவில் பொங்கல் விழா
கோவில்பட்டியில் பராசக்தி மாரியம்மன் கோவில் பொங்கல் விழா நடைபெற்றது.
தூத்துக்குடி
கோவில்பட்டி:
கோவில்பட்டி வேலாயுதபுரம் நாடார் உறவின்முறை சங்கத்திற்கு பாத்தியப்பட்ட பராசக்தி மாரியம்மன் கோவில் பங்குனி பொங்கல் திருவிழா கடந்த 2-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது. நேற்று காலை 6 மணிக்கு பால்குடம் வீதி உலா, அபிஷேகங்கள், அலங்காரம் தீபாரதனை, சக்தி நிறுத்துதல், பூச்செட்டி திருவீதி உலா நடந்தது. பகல் 12 மணிக்கு அன்னதான நிகழ்ச்சியை நகரசபை தலைவரும், நகர தி.மு.க. செயலாளருமான கா. கருணாநிதி தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சிக்கு நாடார் உறவின்முறை சங்கத் தலைவர் எஸ். வேல் முருகேசன், துணை தலைவர் அழகுவேல், செயலாளர் வள்ளியப்ப ராஜ், பொருளாளர் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story