அரசு பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டம்
முத்துப்பேட்டை அருகே எடையூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டம், தலைமை ஆசிரியர் அமுதராசு தலைமையில் நடைபெற்றது.
தில்லைவிளாகம்:
முத்துப்பேட்டை அருகே எடையூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டம், தலைமை ஆசிரியர் அமுதராசு தலைமையில் நடைபெற்றது. உதவி தலைமை ஆசிரியர் பாக்கியராஜ் வரவேற்றார். தலைவர் சண்முகம், செயலர் கணேஷ் குமார், பொருளாளர் நாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கவுரவ தலைவர் வீரையன், நல்லாசிரியர் மணி, கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். அரசு தேர்வு எழுதும் மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி அடைய பாடுபட வேண்டும். எடையூர் சங்கேந்தி ஊராட்சி தலைவர்களிடம் பள்ளியில் வாரம் ஒரு முறை தூய்மை செய்ய தூய்மை பணியாளர்களை பயன்படுத்த வலியுறுத்துவது. பள்ளி கட்டிடத்திற்கு மேலே செல்லும் உயர் அழுத்த மின்கம்பிகளை அப்புறப்படுத்தி மாற்று பாதையில் அமைக்க அதிகாரிகளை வலியுறுத்துவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. முடிவில் ஆசிரியர் இந்திரா நன்றி கூறினார்.