தனியார் மெட்ரிக் பள்ளிைய கண்டித்து பெற்றோர்கள் சாலைமறியல்
தனியார் மெட்ரிக் பள்ளிைய கண்டித்து பெற்றோர்கள் சாலைமறியல் செய்ததால் ேபாக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சேத்துப்பட்டு
42 குழந்தைகளை எல்.கே.ஜி.யில் இலவச கல்வி திட்டத்தில் சேர்க்க அரசு கல்வித்துறை அனுமதி அளித்த நிலையில் திருப்பி அனுப்பிய தனியார் மெட்ரிக் பள்ளிைய கண்டித்து பெற்றோர்கள் சாலைமறியல் செய்ததால் ேபாக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தனியார் பள்ளி
ஏழை குடும்பத்தினர் தங்கள் குழந்தைகளை எல்.கே.ஜியில் இலவசமாக சேர்த்துக்கொள்ளும் திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது. இதில் குழந்தைகளை சேர்க்க மாவட்ட பள்ளி கல்வித்துறைக்கு விண்ணப்பித்து அவர்கள் அனுமதி அளிக்க வேண்டும்.
அதன்படி சேத்துப்பட்டில் இருந்து வந்தவாசிக்கு செல்லும் மேலத்தாங்கல் கூட்ரோட்டில் செயல்படும் தனியார் மெட்ரிக்குலேசன் பள்ளியில் எல்.கே.ஜி.யில் குழந்தைகளை சேர்ப்பதற்கு ஆன்லைன் மூலமாக பெற்றோர்கள் பதிவு செய்தனர்.அந்த மனுவை பரிசீலித்து 42 பேரை சேர்க்க கல்வித்துறை அனுமதி அளித்தது.
அதன்படி பள்ளியில் குழந்தைகளை சேர்க்க பெற்றோர்கள் சென்றனர். பள்ளி நிர்வாகம் மனுக்களை பரிசீலனை செய்த போது 1 கிலோ மீட்டர் தொலைவுக்கு உட்பட்டவர்களை மட்டுமே பள்ளியில் சேர்க்க முடியும். ஆனால் 2 கிலோ மீட்டர் தொலைவுக்கு அப்பால் உங்களது இருப்பிடம் உள்ளதால் விதிமுறைப்படி குழந்தைகளை சேர்க்க முடியாது என பள்ளி நிர்வாகம் மறுத்து திருப்பி அனுப்பியது.
மறியல்
இதனால் ஆத்திரம் அடைந்த பெற்றோர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்தப் பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த சேத்துப்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபாவதி சாலை மறியலில் ஈடுபட்டவரிடம் அரசின் விதிமுறைகளை எடுத்துக் கூறினார். பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர்.