தூக்கில் இளம்பெண் பிணம்-சாவில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர் புகார்
வாணியம்பாடி அருகே இளம்பெண் தூக்கில் பிணமாக கிடந்தார். சாவில் சந்தேகம் இருப்பதாக தந்தை புகார் அளித்துள்ளார்.
வாணியம்பாடி
வாணியம்பாடி அருகே இளம்பெண் தூக்கில் பிணமாக கிடந்தார். சாவில் சந்தேகம் இருப்பதாக தந்தை புகார் அளித்துள்ளார்.
வாணியம்பாடியை அடுத்த பழைய வாணியம்பாடி பகுதியை சேர்ந்தவர் அருண் (வயது 27). கூலி தொழிலாளி. இவருக்கும் ஆம்பூரை அடுத்த கரும்பூர் குப்பராஜாபாளையம் பகுதியை சேர்ந்த பழனி மகள் ஹேமாவதிக்கும் (24) கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமானது. இவர்களுக்கு 6 மாதத்தில் பெண் குழந்தை உள்ளது.
இந்நிலையில் கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் ஹேமாவதி நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கில் பிணமாக தொங்கினார். வெளியில் சென்றிருந்த கணவர் வீட்டார் வீட்டிற்கு திரும்பி வந்த போது ஹேமாவதி பிணமாக தொங்கியது கண்டு அதிர்ச்சி அடைந்து பெண் வீட்டாருக்கும், போலீஸ் நிலையத்திற்கும் தகவல் அளித்துள்ளனர்.
விரைந்து வந்த போலீசார், ஹேமாவதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் தன் மகள் இறப்பில் சந்தேகம் இருப்பதாக பெண்ணின் தந்தை பழனி புகார் அளித்தார். அதன்பேரில் வாணியம்பாடி தாலுகா போலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.