ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் சுவாமி கோவிலில் பரிகார பூஜை திருவிழா


ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் சுவாமி கோவிலில் பரிகார பூஜை திருவிழா
x
தினத்தந்தி 1 Sept 2023 12:15 AM IST (Updated: 1 Sept 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் சுவாமி கோவிலில் பரிகார பூஜை திருவிழா நடந்தது.

தூத்துக்குடி

ஸ்ரீவைகுண்டம்:

நவதிருப்பதி கோவில்களில் முதல் திருப்பதியான ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் சுவாமி கோவிலில் தினமும் நடைபெறும் பூஜை முறைகளில் ஏதாவது விடுதல்கள் இருப்பின், அதற்கு பரிகார பூஜை திருவிழாவான பவுத்ரோத்ஸவம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான பரிகார பூஜை திருவிழா மூன்று நாட்கள் நடந்தது. மூன்றாவது நாளான நேற்று முன்தினம் காலை 7 மணிக்கு விஸ்வரூபம், காலை 8 மணிக்கு திருமஞ்சனம், காலை 9 மணிக்கு சிறப்பு ஹோமம், காலை 11 மணிக்கு பூர்ணாகுதி, நாலாயிர திவ்யப்பிரபந்தம் நடந்தது. தொடர்ந்து மதியம் 12 மணிக்கு சாத்துமுறை, தீர்த்தம், சடாரி பிரசாதம், பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. மாலை 6 மணிக்கு சாயரட்சை, இரவு 7 மணிக்கு ஹோமம், 8 மணிக்கு தங்கதோளுக் கினியானில் சுவாமி கள்ளபிரான் தாயார்களுடன் புறப்பாடு நடைபெற்றது. இதில் நிர்வாக அதிகாரி கோவல மணிகண்டன், ஆய்வாளர் நம்பி, தக்கார் அஜித் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story