தனியார் நிதி நிறுவன முதன்மை இயக்குனரை கைது செய்ய கோரி பாரிவேந்தர் எம்.பி. கலெக்டரிடம் மனு


தனியார் நிதி நிறுவன முதன்மை இயக்குனரை கைது செய்ய கோரி பாரிவேந்தர் எம்.பி. கலெக்டரிடம் மனு
x

வெளிநாட்டில் தலைமறைவாகியுள்ள தனியார் நிதி நிறுவன முதன்மை இயக்குனரை கைது செய்து பணத்தை மீட்டு தர வேண்டும் என பாதிக்கப்பட்ட மக்கள் சார்பில் பாரிவேந்தர் எம்.பி. கலெக்டரிடம் மனு அளித்தார்.

பெரம்பலூர்

இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனரும், பெரம்பலூர் தொகுதி எம்.பி.யுமான பாரிவேந்தர் பொதுமக்களுடன் வந்து பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் கற்பகத்தையும், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி ஆகியோரை சந்தித்து ஒரு புகார் மனு கொடுத்தார். அதில், பெரம்பலூர் மாவட்டத்தை மையமாக கொண்டு ஸ்காட்ஸ் எண்டர்பிரைசஸ் என்ற தனியார் நிதி நிறுவனமானது பொதுமக்களிடையே அதிக வட்டி தருவதாக கூறி சுமார் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் 5 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்களிடம் பணம் வசூல் செய்து மோசடி செய்துள்ளது. வெளி நாட்டில் தலைமறைவாக உள்ள அந்த நிதி நிறுவனத்தின் முதன்மை இயக்குனர் சந்தோஷ்குமாரை உடனடியாக கைது செய்து நமது நாட்டிற்கு கொண்டு வந்து விசாரணையை விரைவாக முடித்து பாதிக்கப்பட்ட பொதுமக்கள் இழந்த பணத்தை சந்தோஷ்குமார் உள்ளிட்ட குற்றவாளிகளிடம் இருந்து மீட்டு தர நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தனர். ஏற்கனவே இந்த சம்பவம் தொடர்பாக புகாரின் பேரில், நிறுவனத்தின் 2-வது இயக்குனரான சந்தோஷ்குமாரின் மனைவியான சிவசங்கரியையும், தாய் பென்னக்கோணம் கிராம ஊராட்சி மன்ற தலைவருமான ஜெயலெட்சுமியை போலீசார் கைது செய்திருந்தனர். ஆனால் அவர்கள் தற்போது ஜாமீனில் வெளியே உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Related Tags :
Next Story