அவதானப்பட்டி பூங்காவில் குவிந்த பொதுமக்கள்


அவதானப்பட்டி பூங்காவில் குவிந்த பொதுமக்கள்
x
தினத்தந்தி 18 Jan 2023 12:15 AM IST (Updated: 18 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

காணும் பொங்கலையொட்டி அவதானப்பட்டி சிறுவர் பூங்கா மற்றும் படகு இல்லத்தில் பொதுமக்கள் குவிந்தனர்.

கிருஷ்ணகிரி

காணும் பொங்கலையொட்டி அவதானப்பட்டி சிறுவர் பூங்கா மற்றும் படகு இல்லத்தில் பொதுமக்கள் குவிந்தனர்.

காணும் பொங்கல்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த, 15-ந்தேதி பொங்கல் விழாவும், 16-ந் தேதி மாட்டுப்பொங்கலும் கொண்டாடப்பட்டது. நேற்று காணும் பொங்கலையொட்டி பொதுமக்கள் குடும்பத்துடன் சுற்றுலா தலங்களுக்கு சென்று காணும் பொங்கல் கொண்டாடினர்.

அதன்படி, கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணைக்கு ஏராளமான பொதுமக்கள் வந்தனர். அவர்கள் அங்கிருந்த சிறுவர் பூங்காவுக்கு சென்று விளையாட்டு உபகரணங்களில் குழந்தைகளை விளையாட விட்டு மகிழ்ந்தனர். மேலும் அணை பகுதியில் உணவு சமைத்து சாப்பிட்ட பிறகு அணையை சுற்றி பார்த்தனர்.

பூங்காவில் குவிந்த மக்கள்

இதேபோல், கிருஷ்ணகிரி அருகில் உள்ள அவதானப்பட்டி சிறுவர் பூங்கா மற்றும் படகு இல்லத்தில் பொதுமக்கள் குவிந்தனர். அவர்கள் படகுகளில் சென்று மகிழ்ந்தனர். காணும் பொங்கலையொட்டி படகு இல்லம் மற்றும் சிறுவர் பூங்காவில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இதேபோன்று அனுமன் தீர்த்தம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் பொதுமக்கள் திரண்டனர். அதேபோல கிருஷ்ணகிரி நகரில் ஓட்டல்கள் உள்பட பெரும்பாலான கடைகளுக்கு நேற்று விடுமுறை விடப்பட்டு இருந்தன. இதனால் மக்கள் நடமாட்டம் இன்றி சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.


Next Story