சாலையோரம் நிறுத்தியிருந்த 15 லாரிகளுக்கு அபராதம்


சாலையோரம் நிறுத்தியிருந்த  15 லாரிகளுக்கு அபராதம்
x

பெரியகுளம் அருகே சாலையோரம் நிறுத்தியிருந்த 15 லாரிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது

தேனி

திண்டுக்கல்-குமுளி தேசிய நெடுஞ்சாலையில் பெரியகுளம் அருகே வடுகப்பட்டி பகுதியில் அடிக்கடி விபத்துகள் நடைபெறுகின்றன. மேலும் சாலையோரம் நிறுத்தப்படும் லாரிகளால் ேபாக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்நிலையில் இன்று போக்குவரத்து போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது போலீஸ் இன்ஸ்பெக்டர் வைரம் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்பட்டிருந்த 15 லாரிகளுக்கு தலா ரூ.600 அபராதம் விதித்தார்.


Next Story