கன்னியாகுமரிக்கு நாடாளுமன்ற குழுவினர் வருகை


கன்னியாகுமரிக்கு நாடாளுமன்ற குழுவினர் வருகை
x
தினத்தந்தி 5 Sept 2023 12:15 AM IST (Updated: 5 Sept 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கன்னியாகுமரிக்கு நாடாளுமன்ற குழுவினர் வருகை தந்தனர்.

கன்னியாகுமரி

கன்னியாகுமரிக்கு நாடாளுமன்ற குழுவினர் வருகை தந்தனர்.

மத்திய நாடாளுமன்ற நுகர்வோர், உணவு மற்றும் பொது வினியோகத்துறை குழு அதன் தலைவர் லாக்கட் சட்டர் ஜி தலைமையில் திருவனந்தபுரத்தில் இருந்து கார் மூலம் புறப்பட்டு நேற்று முன்தினம் கன்னியாகுமரி வந்தது.

இந்த குழுவில் மொத்தம் 30 எம்.பி.க்கள் மற்றும் அதிகாரிகள் இடம் பெற்று இருந்தனர். இந்த குழுவினர் கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை தனிபடகில் சென்று பார்வையிட்டனர். விவேகானந்தர் நினைவு மண்டபம் சென்ற குழுவினரை விவேகானந்தர் பாறை நினைவாலய பொறுப்பாளர் ஆர்.சி.தாணு வரவேற்றார். அதனைத்தொடர்ந்து மண்டபத்தை சுற்றி பார்த்தனர். பின்னர் எம்.பி.க்கள் குழுவினர் விவேகானந்தர் பாறையில் உள்ள தியான மண்டபத்தில் தியானம் செய்தனர். அதன் பின்னர் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். பின்னர் கன்னியாகுமரியில் இருந்து கார் மூலம் திருவனந்தபுரம் புறப்பட்டு சென்றனர்.


Next Story