நாடாளுமன்ற தேர்தல் - அ.தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்புவோர், விருப்ப மனு வழங்க இன்று கடைசிநாள்
நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்புவோர், விருப்ப மனு வழங்க இன்று கடைசிநாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது
சென்னை,
நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதற்கான நடவடிக்கைகளில் தேர்தல் ஆணையம் தீவிரம் காட்டி வருகிறது. தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பே அனைத்து கட்சிகளும் தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகின்றன. பல்வேறு கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு உள்பட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. தேர்தல் கூட்டணி, தேர்தல் பரப்புரை, தொகுதி பங்கீடு, தேர்தல் அறிக்கை தயாரிப்பு உள்பட பல்வேறு நடவடிக்கைகளை அரசியல் கட்சிகள் துரிதப்படுத்தியுள்ளன.
இந்த நிலையில், நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்புவோர், விருப்ப மனு வழங்க இன்று கடைசிநாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் 21ம் தேதி முதல் அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் விருப்ப மனு வழங்கப்பட்டு வருகிறது.
இதுவரை சுமார் 1,000 விருப்ப மனுக்கள் பெற்றுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.