ரெயில் மறியல் போராட்டத்தில் விவசாயிகள் குடும்பத்துடன் பங்கேற்பு


ரெயில் மறியல் போராட்டத்தில் விவசாயிகள் குடும்பத்துடன் பங்கேற்பு
x
தினத்தந்தி 16 Sept 2023 12:15 AM IST (Updated: 16 Sept 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

மத்திய அரசுக்கு எதிராக 19-ந்தேதி நடக்கும் ரெயில் மறியல் போராட்டத்தில் விவசாயிகள் குடும்பத்துடன் பங்கேற்க உள்ளனர் என்று பி.ஆர்.பாண்டியன் தெரிவித்தார்.

திருவாரூர்

முத்துப்பேட்டை:

முத்துப்பேட்டையை அடுத்த மாங்குடி கிராமத்தில் தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தின் சார்பில் காவிரி டெல்டாவில் வருகிற 19-ந் தேதி நடைபெற உள்ள ரெயில் மறியல் போராட்டம் குறித்து ஒன்றிய நிர்வாகிகள் அவசர ஆலோசனை கூட்டம் தலைவர் சரவணன் தலைமையில் நடந்தது. இதில் மாவட்ட செயலாளர் குடவாசல் சரவணன், மாநிலத் துணைச் செயலாளர் செந்தில் குமார் உள்பட நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன் கலந்து கொண்டு பேசினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- கர்நாடக முதல்-மந்திரி தொடர்ந்து 2 மாத காலமாக அனைத்து கட்சிகளையும் கூட்டி தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தரக்கூடாது எனவும், மேகதாதுவில் அணை கட்டியே தீர வேண்டும் என முடிவெடுத்துள்ளார். இது சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை அவமதிக்கும் செயல் ஆகும்.அண்டை மாநில உறவுகளை சீர்குழைக்கும் நடவடிக்கையாகும். காவிரி நீர் பிரச்சினை தொடர்பான மத்திய அரசுக்கு எதிராக வருகிற 19-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ள காவிரி டெல்டா ரெயில் மறியல் போராட்டத்தில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் குடும்பத்துடன் பங்கேற்க உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார். முன்னதாக போராட்டம் குறித்த பிரசுரங்களை நிர்வாகிகளுக்கும், விவசாயிகளுக்கும் வழங்கினார்.


Next Story