புனித சூசையப்பர் ஆலயத்தில் பாஸ்கா நிகழ்ச்சி


புனித சூசையப்பர் ஆலயத்தில் பாஸ்கா  நிகழ்ச்சி
x

புனித சூசையப்பர் ஆலயத்தில் பாஸ்கா நிகழ்ச்சி நடந்தது.

திருச்சி

கிறிஸ்தவ மதத்தின் முக்கிய கோட்பாடான அன்பு, தாழ்மை, மன்னிப்பு இவற்றை ஏசுநாதர் தனது சீடர்களுக்கு உணர்த்தியகாலம் இந்த ஈஸ்டர் புனிதகாலமாகும். சாம்பல் புதன் தொடங்கி ஈஸ்டர் வரை கிறிஸ்தவர்கள் தவக்காலத்தை தொடர்ந்து கடைபிடித்து வருகின்றனர். தவக்கால திருவிழாவின் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை புனித வெள்ளியாக அனுசரித்து அன்றைய தினம் சிலுவைப்பாதை நிகழ்வுகள் ஒவ்வொரு கிறிஸ்தவ ஆலயங்களிலும் நடைபெறுகிறது. அந்த வகையில் திருச்சி பொன்மலையில் உள்ள புனித சூசையப்பர் ஆலயத்தில் நேற்று முன்தினம் இரவு ஏசு கிறிஸ்துவின் சிலுவைப் பாதைகளை விளக்கும் பாஸ்கா ஒளி, ஒலி நாடக நிகழ்ச்சி தத்ரூபமாக அரங்கேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து பூவுலக மக்களுக்காக பிறந்த ஏசுநாதர் யூதர்களால் பொய்குற்றம் சுமத்தப்பட்டு பின்னர் வீதிகளில் சிலுவையினை சுமந்துச் சென்று பின்னர் சிலுவையில் அறையப்பட்ட நிகழ்வு தத்ரூபமாக நிகழ்த்தப்பட்டது. இதில் திருச்சி மறை மாவட்ட ஆயர் ஆரோக்கியராஜ் கலந்து கொண்டார். இதற்கான ஏற்பாடுகளை பொன்மலை சூசையப்பர் ஆலய இளையோர் இயக்கத்தினர் செய்திருந்தனர். இதில் திருச்சி மற்றும் சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


Next Story