பிள்ளைப்பாக்கத்தில் ரூ.7 லட்சத்தில் பயணிகள் நிழற்கூடம்


பிள்ளைப்பாக்கத்தில் ரூ.7 லட்சத்தில் பயணிகள் நிழற்கூடம்
x

பிள்ளைப்பாக்கத்தில் ரூ.7 லட்சத்தில் பயணிகள் நிழற்கூடம் அமைக்கும் பணி தொடக்கம்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி ஒன்றியம் வேளியநல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட பிள்ளைபாக்கம் கிராமத்தில், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் சுந்தராம்பாள் பெருமாள் முயற்சியில் மாவட்ட ஊராட்சிக் குழு நிதியிலிருந்து ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் பயணிகள் நிழற்கூடம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக நெமிலி மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஆர்.பி.ரவீந்திரன் கலந்து கொண்டு பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் சுந்தராம்பாள் பெருமாள், வேளியநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் அமுதா சண்முகம், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் எஸ். ஜி.சி.பெருமாள், ஒன்றிய துணை செயலாளர் வெங்கடேசன், மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் மார்க்கண்டேயன் மற்றும் ஊராட்சி உறுப்பினர்கள், கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


Next Story