பயணிகள் சாலை மறியல் போராட்டம்


பயணிகள் சாலை மறியல் போராட்டம்
x

தூத்துக்குடியில் நேற்று முன்தினம் இரவில் நடந்த விபத்து காரணமாக பஸ் புறப்பட தாமதமானதால், பயணிகள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்

தூத்துக்குடி

தூத்துக்குடி:

தூத்துக்குடியில் நேற்று முன்தினம் இரவில் நடந்த விபத்து காரணமாக பஸ் புறப்பட தாமதமானதால், பயணிகள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விபத்து

தூத்துக்குடி வெள்ளப்பட்டியை சேர்ந்தவர் மரிய ராஜபாண்டி. இவருடைய மகன் மரிய ரமேஷ் (வயது 37). இவர் நேற்று முன்தினம் இரவு மார்க்கெட்டுக்கு சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் புதிய பஸ் நிலையம் அருகில் சென்று கொண்டு இருந்தார். அவருக்கு முன்பு திருச்செந்தூரில் இருந்து கம்பம் நோக்கி சென்ற அரசு பஸ் சென்றது.

பஸ் நிறுத்தத்துக்குள் அந்த பஸ் திரும்பும்போது, அருகில் வந்த மரியரமேசின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மரிய ரமேஷ் பலத்த காயம் அடைந்தார். இதனால் அந்த பஸ் அங்கேயே நிறுத்தப்பட்டது. காயம் அடைந்த அவரை சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

சாலைமறியல்

அப்போது பஸ்சில் இருந்த பயணிகளை வேறு பஸ்சில் அனுப்ப முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் இரவில் வேறு பஸ்கள் வராததால் காலதாமதம் ஏற்பட்டது. இதனால் பயணிகள் ஆத்திரம் அடைந்து ரோட்டில் அமர்ந்து சாலைமறியல் போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி வடபாகம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பயணிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பிறகு விபத்தில் சிக்கிய பஸ்சை தொடர்ந்து கம்பத்துக்கு இயக்க போலீசார் அனுமதித்தனர். பயணிகளை இறக்கிய பிறகு மீண்டும் வர அறிவுறுத்தினர். இதைத்தொடர்ந்து பயணிகள் போராட்டத்தை கைவிட்டு பயணத்தை தொடர்ந்தனர்.

இதுதொடர்பாக தூத்துக்குடி வடபாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story