தர்மபுரியில் இருந்து பெங்களூரு செல்லும் பயணிகள் ரெயில் வழக்கம் போல் இயங்கும் தென்னக ரெயில்வே நிர்வாகம் அறிவிப்பு
தர்மபுரியில் இருந்து பெங்களூரு செல்லும் பயணிகள் ரெயில் வழக்கம் போல் இயங்கும் என்று தென்னக ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
ஓசூர்:
தர்மபுரியில் இருந்து ஓசூர் வழியாக பெங்களூருவுக்கு 06278 என்ற எண் கொண்ட பயணிகள் ரெயில் சென்று வருகிறது. இந்த ரெயில் இன்று (திங்கட்கிழமை) முதல் காலை 6.30 மணிக்கு தர்மபுரியில் இருந்து புறப்பட்டு பெங்களூருவுக்கு காலை 10 மணிக்கு சென்றடைவதாக, தென்மேற்கு ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால் ெரயில் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து, தர்மபுரியில் இருந்து ஓசூர் வழியாக பெங்களூருவுக்கு செல்லும் ரெயில் நேரத்தை மாற்றக்கூடாது. தற்போதுள்ள நேரமே தொடர வேண்டும் என்று ரெயில் பயணிகள், பா.ஜ.க. மாநில துணைத்தலைவர் கே.எஸ்.நரேந்திரன் மற்றும் தென்னக ரெயில்வே நிர்வாகத்திடம் கோரிக்கை மனு வழங்கினர்.
இந்த நிலையில் பயணிகள் ரெயில் தர்மபுரியில் இருந்து காலை 5 மணிக்கு புறப்பட்டு காலை 8.10 மணிக்கு பெங்களூரு சென்றடையும். ரெயில் நேரம் மாற்றப்படாது. வழக்கம் போல் இயங்கும் என்று தென்மேற்கு ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.